தமிழ்நாடு

ஆசிரியர் தகுதியில் சமரசம் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்

DIN

கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நியமிக்கும் கல்வித் தகுதி விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில்  நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் போதிய தகுதி பெறவில்லை என வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, கல்வித் தகுதி விவகாரத்தில் சமரசமோ, அனுதாபமோ காட்டக் கூடாது என கருத்து தெரிவித்தார். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் தகுதிகளை சரிபார்க்க வேண்டும் என்று நீதிபதி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கல்லூரிகளில் செய்யப்பட்ட நியமனங்கள் முறையானதா எனபதை கல்லூரிக் கல்வி  இயக்குநர் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில்  நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர்களை கல்லூரிக் கல்வி  இயக்கம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT