2023 அரசு விடுமுறை: ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தப்பிக்குமா விநாயகர் சதுர்த்தி? 
தமிழ்நாடு

2023 அரசு விடுமுறை: ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தப்பிக்குமா விநாயகர் சதுர்த்தி?

2023ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. அதில், விநாயகர் சதுர்த்தி பண்டிகை தவறுதலாக ஒருநாள் முன்னதாக அரசு அறிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

DIN


சென்னை: 2023ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. அதில், விநாயகர் சதுர்த்தி பண்டிகை தவறுதலாக ஒருநாள் முன்னதாக அரசு அறிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தமிழக அரசு வெளியிட்ட விடுமுறைப் பட்டியலில், விநாயகர் சதுர்த்தி விழா விடுமுறையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன.

2023ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை பட்டியலை, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு ஒரு சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். அதில்,

1. ஆங்கிலப் புத்தாண்டு (ஜனவரி 1) - ஞாயிற்றுக்கிழமை
2. பொங்கல் (ஜனவரி 15)- ஞாயிற்றுக்கிழமை
3. திருவள்ளுவா் தினம் (ஜனவரி 16)- திங்கள்கிழமை
4. உழவா் திருநாள் (ஜனவரி 17) - செவ்வாய்க்கிழமை
5. குடியரசு தினம் (ஜனவரி 26) - வியாழக்கிழமை
6. தைப்பூசம் (பிப்ரவரி 5)- ஞாயிற்றுக்கிழமை
7. தெலுங்கு வருடப் பிறப்பு (மாா்ச் 22) - புதன்கிழமை
8. மகாவீரா் ஜெயந்தி (ஏப்ரல் 4)- செவ்வாய்க்கிழமை
9. புனித வெள்ளி (ஏப்ரல் 7)- வெள்ளிக்கிழமை
10. தமிழ்ப் புத்தாண்டு (ஏப்ரல் 14)- வெள்ளிக்கிழமை
11. ரம்ஜான் (ஏப்ரல் 22)- சனிக்கிழமை
12. மே தினம் (மே 1)- திங்கள்கிழமை
13. பக்ரீத் (ஜூன் 29) - வியாழக்கிழமை
14. மொஹரம் (ஜூலை 29)- சனிக்கிழமை
15. சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15)- செவ்வாய்க்கிழமை
16. கிருஷ்ண ஜெயந்தி (செப்டம்பா் 6)- புதன்கிழமை
17. விநாயகா் சதுா்த்தி (செப்டம்பா் 17)- ஞாயிற்றுக்கிழமை
18. மீலாது நபி (செப்டம்பா் 28)- வியாழக்கிழமை
19. காந்தி ஜெயந்தி (அக்டோபா் 2)- திங்கள்கிழமை
20. ஆயுத பூஜை (அக்டோபா் 23)- திங்கள்கிழமை
21. விஜயதசமி (அக்டோபா் 24)- செவ்வாய்க்கிழமை
22. தீபாவளி (நவம்பா் 12)- ஞாயிற்றுக்கிழமை
23. கிறிஸ்துமஸ் (டிசம்பா் 25)- திங்கள்கிழமை என்று பட்டியல் வெளியானது.

ஆனால், விநாயகர் சதுர்த்தி தவறுதலாக ஒருநாள் முன்கூட்டியே விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது, வாக்கிய பஞ்சாப்பத்தின்படி, செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி. பொதுவாக தமிழகத்தில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படிதான் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. திருக்கணித பஞ்சாங்கத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இரண்டுமே இல்லாமல் தமிழக அரசு வெளியிட்ட பட்டியலில், செப்டம்பர் 17ஆம் தேதி அதுவும் ஞாயிற்றுக்கிழமையில் விநாயகர் சதுர்த்தி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசு கவனம் செலுத்தி, விநாயகர் சதுர்த்திக்கான அரசு விடுமுறை செப்டம்பர் 18ஆம் தேதி திங்கள்கிழமைக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அவ்வாறு மாற்றப்பட்டால், குறைந்தபட்சம் ஒரு விடுமுறையாவது ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தப்பிக்கும் என்று பல தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்.

ஞாயிறில் முக்கிய பண்டிகைகள்
தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளான பொங்கல், தீபாவளி போன்றவை வார விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படங்களைப் பயன்படுத்தத் தடை!

தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு 800 உயர்வு!

வங்கக் கடலில் புயல்! மீனவர்கள் கரை திரும்புக: கடலோர காவல்படை எச்சரிக்கை!!

கரூர் கூட்ட நெரிசல் பலி: வங்கி கணக்கில் மத்திய அரசின் ரூ. 2 லட்சம் நிதி!

மேட்டூர் அணை நீர்மட்டம் 6-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

SCROLL FOR NEXT