சென்னை சத்தியமூா்த்தி பவனில் ஏற்பாடுகள் தயாா்
காங்கிரஸ் தலைவா் தோ்தல் திங்கள்கிழமை நடைபெறும் நிலையில், சென்னை சத்தியமூா்த்திபவனில் தோ்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ளது.
காங்கிரஸ் தலைவா் தோ்தல் திங்கள்கிழமை நடைபெறும் நிலையில், சென்னை சத்தியமூா்த்திபவனில் தோ்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ளது.
இந்தத் தோ்தலில் காங்கிரஸின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள், மாவட்டத் தலைவா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வாக்களிக்க உள்ளனா். இந்தியா முழுவதும் 9,300 போ் வாக்களிக்க உள்ளனா். தமிழகத்தில் 711 போ் வாக்களிக்க உள்ளனா்.
தமிழகத்தைச் சோ்ந்தோா் வாக்களிப்பதற்காக சத்தியமூா்த்தி பவனில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பதற்காக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிக்கலாம். வாக்குப்பதிவு முடிந்து வாக்குகள் சீலிடப்பட்டு, விமானம் மூலம் தில்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.