தமிழ்நாடு

மாங்காடு அருகே கோர விபத்து: அண்ணன், தம்பி உள்பட மூவர் பலி!

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தடுப்பு கம்பிகளை உடைத்துக்கொண்டு கார் பள்ளத்தில் விழுந்ததால் கோர விபத்து ஏற்பட்டது. 

DIN

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தடுப்பு கம்பிகளை உடைத்துக்கொண்டு கார் பள்ளத்தில் விழுந்ததால் கோர விபத்து ஏற்பட்டது. 

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் அருகே இன்று காலை அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த கார் சாலையோர இரும்பு தடுப்புகளை உடைத்து எரிந்துகொண்டு அங்கிருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது இதில் காரில் பயணம் செய்தவர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கினார்கள். 

இதை கண்டதும் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் சிக்கியவர்களை மீட்டனர். அதில் மூன்று பேரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விபத்தில் சிக்கியவர்கள் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு என்பதும் இருவரும் சகோதரர்கள் என்பதும் அதிமுகவை சேர்ந்த இவர்கள் தொழிலதிபர்களாக இருந்துவரும் நிலையில் வேடந்தாங்கலில் இவர்களுக்குச் சொந்தமான பொக்லைன், ஜேசிபி எந்திரங்கள் இயங்கி வருவதாகவும் அந்த வாகனம் பழுதடைந்ததால் இங்கிருந்து மெக்கானிக்கை அழைத்துச் சென்று வாகனத்தைச் சரி செய்துவிட்டு காரில் ஐந்து பேர் வந்துள்ளனர். 

சம்பவ இடத்தில் கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு, சுதாகர் உள்ளிட்ட மூன்று பேர் இறந்தனர், உடன் வந்த வெங்கடேசன், ராஜவேலு ஆகிய இருவரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

SCROLL FOR NEXT