தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு இன்று தொடக்கம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமை (அக்.19) தொடங்குகிறது.

DIN

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமை (அக்.19) தொடங்குகிறது.

அதில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் நேரடியாகவும், பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளது.

எம்.பி.பி.எஸ். மற்றும் பிடி..எஸ். இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) நடத்தி வருகிறது. நிகழாண்டு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கலந்தாய்வு புதன்கிழமை (அக்.19) தொடங்குகிறது. விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு முதல் நாளிலும், 20-ஆம் தேதி அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வும் சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் நேரடியாக நடைபெறும்.

பொதுக் கலந்தாய்வு புதன்கிழமை முதல் 25-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து 21 முதல் 27-ஆம் தேதி வரை நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் இணையவழியே நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT