தமிழ்நாடு

கொடைக்கானல் சாலையில் விபத்து: தம்பதி உள்பட 3 பேர் பலி

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே காட்ரோடு-கொடைக்கானல் சாலையில், ஆட்டோ மீது வேன் மோதியதில் சென்னையைச் சேர்ந்த தம்பதி, ஆட்டோ ஓட்டுநர் என 3  பேர் பலியாகினர்.

DIN

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே காட்ரோடு-கொடைக்கானல் சாலையில், ஆட்டோ மீது வேன் மோதியதில் சென்னையைச் சேர்ந்த தம்பதி, ஆட்டோ ஓட்டுநர் என 3  பேர் பலியாகினர்.

சென்னையைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன்(69). இவரது மனைவி சந்திரிகா(65). இவர்கள், கொடைக்கானல் சாலையில் பாரி எஸ்டேட் பகுதியில் சொந்தமாக வீடு வாங்கி குடியிருந்து வந்தனர். சில நாள்களுக்கு முன் சென்னைக்குச் சென்று விட்டு திரும்ப வந்த கமலக்கண்ணன், சந்திரிகா ஆகியோர், காட்ரோடு பகுதியிலிருந்து கொடைக்கானல் சாலையில் உள்ள தங்களது வீட்டிற்கு ஆட்டோவில் சென்றனர்.

அப்போது, கெங்குவார்பட்டி விலக்கு அருகே எதிர் திசையிலிருந்து வந்த வேன், ஆட்டோ மீது மோதியது. இதில் கமலக்கண்ணன், சந்திரிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார்(35) தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாழப்பாடி அருகே கவிழ்ந்த ஆம்னி பேருந்து: தொழிலதிபர் பலி; 5 பேர் படுகாயம்!

மேட்டூர் அணை நிலவரம்!

மாநிலத் தலைவர் பதவிலிருந்து விலகலா? நயினார் நாகேந்திரன் பதில்

ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கேது

அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT