தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம் தனிந்தது!

மேட்டூர் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததை அடுத்து அணைக்கு வரும் நீரின் அளவு மளமளவென சரிந்தது. இதையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம் சற்று தனிந்துள்ளது. 

DIN

மேட்டூர் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததை அடுத்து அணைக்கு வரும் நீரின் அளவு மளமளவென சரிந்தது. இதையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம் சற்று தனிந்துள்ளது. 
 
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 65,000 கன அடியாக குறைந்தது. நீர் வரத்து குறைந்ததால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 65,000 கன அடியாக குறைக்கப்பட்டது.

நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 43,500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது. 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்து வருவதால் காவிரி கரையோரங்களில் வெள்ள அபாயம் சற்று தனிந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT