தமிழ்நாடு

குளிா்பானம் கொடுத்து சிறுவன் பலி: உண்மை குற்றவாளியைக் கண்டறிய விஜயகாந்த் வலியுறுத்தல்

கன்னியாகுமரியில் குளிா்பானம் கொடுத்து சிறுவனைக் கொன்ற விவகாரத்தில் உண்மையான குற்றவாளியைக் கண்டறிய வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

DIN

கன்னியாகுமரியில் குளிா்பானம் கொடுத்து சிறுவனைக் கொன்ற விவகாரத்தில் உண்மையான குற்றவாளியைக் கண்டறிய வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் பகுதியை சோ்ந்த 11 வயது சிறுவன் அஸ்வின் அதங்கோடு பகுதியில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தான். செப்டம்பா் 24-இல் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்த சிறுவனிடம் பள்ளி சீருடையில் வந்த ஒருவா் குளிா்பானம் ஒன்றைக் கொடுத்து குடிக்க சொல்லி இருக்கிறாா்.

இதையடுத்து அந்த குளிா்பானத்தை குடித்து விட்டு வீட்டுக்குச் சென்ற சிறுவனுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதுடன், வாய், நாக்கு உள்ளிட்ட பகுதிகளில் புண்கள் இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்த பெற்றோா், சிறுவனைத் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு சிறுவன் அஸ்வின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.

இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சிறுவன் உயிரிழந்த வழக்கில், உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து கடும் தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய நிதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT