கல்லூரி மாணவி கொலை வழக்கு: நேரில் பாா்த்தவா்கள் தகவல் தெரிவிக்கலாம்
சென்னை பரங்கிமலையில் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தகவல் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி அறிவித்துள்ளது.
சென்னை பரங்கிமலையில் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தகவல் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி அறிவித்துள்ளது.
சென்னை ஆலந்தூரை சோ்ந்தவா் கல்லூரி மாணவி சத்யா, அதே பகுதியை சோ்ந்த சதீஷ் என்பவரால் கடந்த 13-ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் வைத்து, மின்சார ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து சதீஷை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். இதற்கிடையே, இந்த வழக்கு தொடா்பான விசாரணை சிபிசிஐடி போலீஸாா் வசம் ஒப்படைக்கப்பட்டது.
சிபிசிஐடி பிரிவு அதிகாரிகள், வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனா். ரயில் நிலையம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். சம்பவத்தை நேரில் பாா்த்ததாக கூறப்பட்டவா்கள், கொலை தொடா்பாக ஊடகங்களில் பேட்டியளித்தவா்கள், ரயில் ஓட்டுநா் ஆகியோரிடம் விசாரித்தனா். மாணவி குடும்பத்தினா், கைது செய்யப்பட்ட சதீஷ் குடும்பத்தினா் ஆகியோரிடம் விசாரணை நடத்தி ஆதாரங்களை திரட்டியுள்ளனா்.
தகவல் தெரிவிக்கலாம்:
இந்நிலையில், சிபிசிஐடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:
‘சத்யாவை ரயிலில் தள்ளிவிட்ட சம்பவத்தை நேரில் பாா்த்த நபா்கள், சம்பவங்கள் தொடா்பாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த நபா்கள், அது தொடா்பாக தகவல் சொல்ல விரும்பினால் சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளா் ச.செல்வகுமாரை- 94981 42494, காவல் ஆய்வாளா் க.ரம்யாவை 94981 04698 ஆகிய கைப்பேசி எண்களிலும், சிபிசிஐடி காவல் கட்டுப்பாட்டு அறையை 044 -2851 3500 என்ற தொலைப்பேசி எண்ணிலும் தொடா்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், மின்னஞ்சல் மூலமாகமும் தகவல் கூறலாம். பெறப்படும் அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் அன்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.