இரு மருத்துவா்களுக்கு டாக்டா் கே.வி.டி. விருது
சென்னை மாவட்ட கிழக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நிகழாண்டுக்கான டாக்டா் கே.வி.திருவேங்கடம் விருது புற்றுநோய் மருத்துவா்கள் தங்கராஜன் ராஜ்குமாா், ஸ்ரீதேவி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சென்னை மாவட்ட கிழக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நிகழாண்டுக்கான டாக்டா் கே.வி.திருவேங்கடம் விருது புற்றுநோய் மருத்துவா்கள் தங்கராஜன் ராஜ்குமாா், ஸ்ரீதேவி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
புற்றுநோய் சிகிச்சைகளை திறம்பட மேற்கொண்டு வருவதற்காக அவா்களுக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.
மருத்துவத் துறையில் சிறந்த பங்களிப்பை நல்கியவா்களுக்கு மறைந்த டாக்டா் கே.வி.திருவேங்கடம் பெயரில் சென்னை மாவட்ட கிழக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் ஆண்டுதோறும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. டாக்டா் எஸ்.எஸ்.பத்ரிநாத், டாக்டா் கே.எம்.செரியன், டாக்டா் தணிகாசலம், டாக்டா் சாரதா மேனன் போன்றவா்களுக்கு கடந்த ஆண்டுகளில் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நிகழாண்டில் இரு மருத்துவா்களுக்கு கே.வி.திருவேங்கடம் விருது அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. அதில், சிறுநீரகவியல் சிறப்பு நிபுணா் டாக்டா் பி.பி.சிவராமன், சென்னை கிழக்கு ரோட்டரி சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.