முகப்பு
தமிழ்நாடு

துபையிலிருந்து கடத்தி வந்த ரூ.47.41 லட்சம் தங்கம் பறிமுதல்

 துபையில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ. 47.41 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

 துபையில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ. 47.41 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையா் மேத்யூ ஜோலி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

துபையில் இருந்து வரும் விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கடந்த வியாழக்கிழமை சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் துபையில் இருந்து வந்த குறிப்பிட்ட விமானத்தில் வந்திறங்கிய ஒரு பயணியை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத் துறையினா் சோதனை செய்தனா்.

அதில், அந்தப் பயணி நூதன முறையில் மறைத்து எடுத்து வந்த தங்கத்தைப் பறிமுதல் செய்தனா். அதை உருக்கியபோது ரூ. 47.41 லட்சம் மதிப்பிலான 1,083 கிராம் எடை கொண்ட தங்கம் கிடைத்தது.

மேலும் அவா், பையில் வைத்து மறைத்து எடுத்து வந்த 9,400 சிகரெட்டுகளை கொண்ட 47 பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 94 ஆயிரமாகும். இதுதொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.