திருமண சடங்கு இல்லாமல் பதிவு மட்டும் செய்வது அங்கீகாரமளிக்காது: உயர் நீதிமன்ற கிளை 
தமிழ்நாடு

திருமண சடங்கு இல்லாமல் பதிவு மட்டும் செய்வது அங்கீகாரமளிக்காது: உயர் நீதிமன்ற கிளை

எந்த திருமணச் சடங்கும் செய்யாமல் இருப்பது, அவர்களுக்கு திருமண தம்பதி என்ற அங்கீகாரத்தை அளிக்காது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

DIN


மதுரை: ஒரு தம்பதிக்கு பதிவு திருமணம் மட்டும் செய்து, அவர்களது வழக்கப்படி எந்த திருமணச் சடங்கும் செய்யாமல் இருப்பது, அவர்களுக்கு திருமண தம்பதி என்ற அங்கீகாரத்தை அளிக்காது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், பதிவு திருமணத்தில் வழிகாட்டு நெறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிக்க.. நகைச்சுவை என்ன விலை?: ‘பிரின்ஸ்’ திரைப்பட விமர்சனம்

தம்பதி என பதிவு செய்வோர், அவர்களது முறைப்படி திருமணச் சடங்குகளை செய்துகொள்வது கட்டாயம். தனிநபர் சட்டப்படி, ஒரு தம்பதி அவர்களது முறைப்படி திருமணத்தை நடத்தி முடித்த பிறகே, அவர்களது திருமணத்தை தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009-ன்படி பதிவு செய்ய வேண்டும். ஆனால், திருமண சடங்குகள் எதையும் மேற்கொள்ளாமல், இந்த சட்டத்தின் கீழ் ஒரு திருமணத்தைப் பதிவு செய்ய முடியாது என்று நீதிபதி ஆர். விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு திருமணத்தைப் பதிவு செய்வதற்கு முன்பு, அவர்களுக்கு அவரவர் முறைப்படி திருமணச் சடங்குகள் நடைபெற்றதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது, பதிவுத் துறை அதிகாரிகளின் கடமை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அவ்வாறு திருமணச் சடங்குகள் நடைபெற்றிருக்கிறதா என்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், இரு தரப்பினரும் அளிக்கும் திருமணப் பதிவு விண்ணப்பங்களை வெறுமனே இயந்திரக்கதியில் பதிவு செய்யக் கூடாது. ஒரு வேளை, எந்த திருமணச் சடங்கும் நடைபெறாமல், ஒரு தம்பதிக்கு திருமணப் பதிவு சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்தால், அந்த சான்றிதழ் போலி திருமணப் பதிவுச் சான்றிதழாகவேக் கருதப்படும் என்றும் நீதிபதி திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் EPS! | ADMK

தெருநாய்கள் தொல்லை: சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி!

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்வு!

இஸ்ரேலில் தட்டம்மை பரவல்: பாதிப்புகளின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரிப்பு!

லோகாவால் இந்த அபாயம் இருக்கிறது: ஜித்து ஜோசஃப்

SCROLL FOR NEXT