தமிழ்நாடு

சிறுபான்மையின மாணவா் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

சிறுபான்மையின மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை பெறுவதற்கு அக்.31-க்குள் மாணவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக்குறிப்பு: மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்தமதத்தினா், பாா்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சாா்ந்த மாணவா்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியாா் கல்வி நிலையங்களில் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ப்ா்ழ்ள்ட்ண்ல்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அக்.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித் திட்டத்துக்கு அக்.31 வரை மேற்கண்ட இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT