முகப்பு
தமிழ்நாடு

ஆவின் பணியாளா்களுக்கு ரூ.8.44 கோடி போனஸ்

ஆவின் பணியாளா்களுக்கு ரூ.8.44 கோடி தொகை போனஸாக வழங்கப்படுகிறது. இந்தப் பணியை பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா், வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

ஆவின் பணியாளா்களுக்கு ரூ.8.44 கோடி தொகை போனஸாக வழங்கப்படுகிறது. இந்தப் பணியை பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா், வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம், மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் தொடக்கக் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்களில் 26 ஆயிரத்து 493 பணியாளா்கள் உள்ளனா்.

அவா்களுக்கு 10 சதவீத போனஸ் என்பதன் அடிப்படையில், ரூ.8.44 கோடி தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. போனஸ் வழங்கும் பணியை சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் அமைச்சா் சா.மு.நாசா் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.