சஞ்சீவராயன் குளம் நிரம்பியதால் வெளியேறி வரும் உபரி நீா். 
தமிழ்நாடு

தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோர் இதை மறக்க வேண்டாம்

திங்கள்கிழமைதான் தீபாவளி என்றாலும் இன்றே அரசு விடுமுறை தொடங்கியிருப்பதால் சந்தைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் அதிக கூட்டம் காணப்படுகிறது.

DIN

சென்னை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. திங்கள்கிழமைதான் தீபாவளி என்றாலும் இன்றே அரசு விடுமுறை தொடங்கியிருப்பதால் சந்தைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் அதிக கூட்டம் காணப்படுகிறது.

சென்னையில் இருந்து நேற்று மாலை முதலே ஏராளமானோர் சிறப்பு பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களல் சொந்த ஊர் நோக்கிப் புறப்பட்டனர்.

இதனால், சென்னையைச் சுற்றி இருக்கக் கூடிய சுங்கச்சாவடிகளில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்களன்று தீபாவளி வருவதால், தொடர் விடுமுறையைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகை என்று மக்கள் அதீத உற்சாகத்தில் உள்ளனர்.

எதுவாகினும் பாதுகாப்பான சந்தோஷமான தீபாவளியே பலரின் விருப்பமும் கூட. தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் திங்கள்கிழமை அக்.24ஆம் தேதி வரை, சில பள்ளிகளில் அக்டோபர் 25ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த ஊர் செல்லும் மக்கள், இது எங்கள் ஊர் குளம், எங்கள் ஊர் ஆறு என்று தண்ணீரைப் பார்த்ததும் குதித்துவிட வேண்டாம். குளிக்க இறங்கிவிட வேண்டாம்.

பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் கனமழையால், கண்மாய், குளம், குட்டை என அனைத்து நீர்நிலைகளும் இதுவரை இல்லாத வகையில் நிரம்பியுள்ளன, பல ஊர்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால், விடுமுறை நாள்களில் சொந்த ஊர் செல்வோர், மாணவர்கள், மக்கள், சுற்றுலா பயணிகள் என யாரும், நீர்நிலையில்  பாதுகாப்பின்றி குளிக்கச் செல்ல வேண்டாம்.

பாதுகாப்பாக வீட்டிலேயே தீபாவளியை கொண்டாடுங்கள். நீர்நிலைகளுக்குச் செல்லும் போது கவனமாக இருங்கள். குழந்தைகளுடன் செல்லும் போது அதீத எச்சரிக்கையுடன் செயல்படுவதும் அவசியம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT