முகப்பு
தமிழ்நாடு

ராமஜெயம் கொலை வழக்கு: 20 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை; டிஜிபி வருகை

திமுக அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகத்திற்கு இடமான வட்டத்தில் உள்ள 20 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை இன்று நடைபெறுகிறது. 

Updated On : 22 அக்டோபர், 2022 at 12:16 PM
பகிர்:

திருச்சி: திமுக அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகத்திற்கு இடமான வட்டத்தில் உள்ள 20 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை இன்று நடைபெறுகிறது.  இதற்காக டிஜிபி ஷகில் அக்தர் திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். 

ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை விசாரணை செய்ததில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ள 20 சந்தேக நபர்கள் டிஜிபி ஷகீல் அக்தர் முன்பு இன்று ஆஜராகின்றனர். அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை திருச்சி திருவரம்பூர் அருகே நடைபெற உள்ளது.

ஏற்கனவே நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுள்ள சிபிசிஐடி போலீசார் ராமஜெயத்தின் உதவியாளர்களாக வேலை பார்த்த மோகன், நந்தகுமார் ஆகியோருக்கு சிபிஐ உதவியுடன் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்த முறை 20 பேர் என்பதால் அவர்களிடம் சோதனைக்குப் பிறகே இந்த வழக்கில் வேறு எந்த  திருப்பமும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பது தெரிய வரும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.