சிலிண்டர் வெடித்ததில் இரண்டாக உடைந்து நொறுங்கிய கார். 
தமிழ்நாடு

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

கோவை உக்கடம் ஈஸ்வரன்கோவில் வீதியில் காரில் இருந்த வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் பலியானார்.

DIN

கோவை உக்கடம் பகுதியில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் பலியானார்.

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியிள் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த மாருதி காரில் திடீரென கேஸ் கசிவின் காரணமாக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். தொடர்ந்து தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து ஏற்பட்ட பகுதியில் நான்கு புறமும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைத்துள்ள போலீசார் விபத்து குறித்த விசாரணை மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. கார், ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய போது சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது.

சிலிண்டர் வெடித்து கார் இரண்டாக உடைந்த சம்பவத்தையடுத்து  சென்னையிலிருந்து கோவைக்கு டிஜிபி சைலேந்திரபாபு புறப்பட்டார். காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து பலியான நபர் யார் என்று இதுவரை கண்டறியப்படாத நிலையில் டிஜிபி விரைந்துள்ளார். இதனிடையே சிலிண்டர் வெடித்து கார் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உக்கடம் ஈஸ்வரன்கோவில் பகுதியில் சிலிண்டர் வெடித்து கார் விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கார் யாருடையது? இறந்தவர் யார்? என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

காருக்குள் ஒரு சிலிண்டர் இருந்துள்ளது, வேறு ஏதேனும் பொருள் இருந்ததா என விசாரணைக்கு பிறகே தெரியும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT