தமிழ்நாடு

தீபாவளி! விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 340 வழக்கு

DIN

சென்னையில் நேரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக, 340 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகை திங்கள் கிழமை நேற்று (அக்.24) கொண்டாடப்பட்டது. காற்று மாசு மற்றும் ஒலி மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், பட்டாசு வெடிப்பதற்கு தமிழக அரசு சார்பில் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அதன்படி, காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

இந்நிலையில் சென்னையில் நேர கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 340 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 14 கடைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT