செவ்வாய்க்கிழமை சுருளி அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள். 
தமிழ்நாடு

தீபாவளி விடுமுறை: சுருளி அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தீபாவளி விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை சுருளி அருவியில்  சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக சென்று குளித்து வந்தனர்.

DIN

கம்பம்: தீபாவளி விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை சுருளி அருவியில்  சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக சென்று குளித்து வந்தனர்.

தேனி மாவட்டத்தில் புகழ் பெற்றது சுருளி அருவி. இந்த அருவியில் குளிக்க, வழிபாடுகள் செய்ய  தமிழகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை புரிவார்கள்.

சுருளிமலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்வரத்து ஓடைகளான அரிசிப் பாறை, ஈத்தைப்பாறைகளில் அதிக அளவில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், கடந்த அக்டோபர் 20ஆம் தேதி சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க  வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்நிலையில், சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்ததால் செவ்வாய்க்கிழமை குளிக்க அனுமதித்தனர். இதனால் தீபாவளி விடுமுறையை கொண்டாட வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் ஒழுங்குப்படுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்வாரியத்தில் கள உதவியாளா்களுடன் 400 உதவிப் பொறியாளா்கள் தோ்வு: தமிழக அரசு உத்தரவு

திரிணமூல் காங்கிரஸ் மக்களவைத் தலைவராக அபிஷேக் பானா்ஜி நியமனம்

நீலகிரிக்கு ரெட் அலர்ட்: சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்!

பட்டியல் இனத்தவருக்கு எதிராக அவதூறு: நடிகை மீரா மிதுனை ஆஜா்படுத்த உத்தரவு

சென்னையில் 7 மாதங்களில் சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.18.08 கோடி மீட்பு

SCROLL FOR NEXT