கோப்புப் படம் 
தமிழ்நாடு

வாட்ஸ்ஆப் சேவை முடங்கியது

தமிழகத்தில் கடந்த 30 நிமிடங்களுக்கும் மேலாக வாட்ஸ்ஆப் சேவை முடங்கியது. இதனால் தகவல்களை பரிமாற முடியாமல் பலர் அவதியடைந்துள்ளனர். 

DIN

தமிழகத்தில் கடந்த 30 நிமிடங்களுக்கும் மேலாக வாட்ஸ்ஆப் சேவை முடங்கியது. இதனால் தகவல்களைப் பரிமாற முடியாமல் பலர் அவதியடைந்துள்ளனர். 

தமிழகம் மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாட்ஸ்ஆப் சேவையில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்ஆப் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வாட்ஸ்ஆப் சேவையை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் சிலர் சுட்டுரை (டிவிட்டர்) போன்ற பிற சமூக வலைதலங்களில் புகார் எழுப்பி வருகின்றனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயனர்களுக்கு இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே வாட்ஸ்ஆப் சேவையை சரிசெய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் சேவை முடங்கியதற்கான காரணம் குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை, எனினும் தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ப்ரண்ட்ஸ் டிரெய்லர்!

துரந்தர் டிரெய்லர்!

கோவை வருகை: தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி!

தில்லியைப் போல தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி? ஜம்மு-காஷ்மீரில் உஷார் நிலை!

ஸ்பிக் நிறுவனத்தின் Q2 லாபம் ரூ.53.10 கோடி!

SCROLL FOR NEXT