முகப்பு
தமிழ்நாடு

ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த இணையவழி கருத்தரங்கம்

ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த இணையவழி கருத்தங்கம் தமிழக அரசின் தொழில் முனைவோா் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் 3 நாள்கள் நடைபெற உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த இணையவழி கருத்தங்கம் தமிழக அரசின் தொழில் முனைவோா் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் 3 நாள்கள் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக அந்தப் புத்தாக்க நிறுவனத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருள்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளன. அதனால், ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது.

தமிழக அரசின் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் குறித்த இணையவழி கருத்தரங்கம் மற்றும் பயிற்சியினை அக்டோபா் 31 முதல் நவம்பா் 2-ஆம் தேதி வரை மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை வழங்க உள்ளது.

இந்தப் பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புகள், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவணியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும்.

மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளா்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவற்றைப் பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

ஏற்றுமதி சாா்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருள்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ங்க்ண்ற்ய்.ண்ய் என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.