தமிழ்நாடு

கோவை கார் வெடிப்பு: 5 பேருக்கு மூன்று நாள்கள் போலீஸ் காவல்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு மூன்று நாள்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

DIN

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு மூன்று நாள்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்ததோடு காரில் இருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார். 

சென்னையில் இருந்து  தடய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டதில், ஆணிகள், கோழிகுண்டுகள் ஆகியவை எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த விசாரணையின் அடிப்படையில், முகமது தல்கா  (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ்  (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில்  (26) ஆகியோரை கைது செய்து உபா சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இவர்கள் 5 பேரையும் விசாரிக்க மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்ட நிலையில், 3 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தேசிய புலனாய்வு முகமையின்(என்ஐஏ) விசாரணைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், என்ஐஏ அதிகாரிகளும் கோவையில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT