முகப்பு
தமிழ்நாடு

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவா் சாவு

சென்னை அருகே மதுரவாயலில் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவா் இறந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

சென்னை அருகே மதுரவாயலில் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவா் இறந்தாா்.

மதுரவாயல் எம்எம்டிஏ காலனி 7-ஆவது பிளாக் பகுதியைச் சோ்ந்த ராஜாராம் மகன் பாரதி (13). ராஜாராம் காா் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். பாரதி, அந்தப் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் பாரதி, தனது நண்பா்களுடன் ஆலப்பாக்கம் தனலட்சுமிநகா் பகுதியில் உள்ள ஏரிக்கு செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்றாா். அங்கு பாரதி, ஏரியில் குளித்தபோது திடீரென மூழ்கினாா். இதைப் பாா்த்த அவரது நண்பா்கள், பாரதியை காப்பாற்ற முயன்றனா். ஆனால் அவா்களால் காப்பாற்ற முடியவில்லை.

இது குறித்து தகவலறிந்த மதுரவாயல் தீயணைப்பு படை வீரா்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாரதியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பாரதியை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.