தமிழ்நாடு

அம்பேத்கர் திருவுருவச் சிலையை திறந்துவைத்தார் முதல்வர்!

சென்னை அம்பேத்கர் மணிமண்டப வளாகத்தில் அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

DIN

சென்னை அம்பேத்கர் மணிமண்டப வளாகத்தில் அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

தமிழக சட்டப்பேரவையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அம்பேத்கர் சிலைக்கான செலவை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்பதாக கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

இந்நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் அம்பேத்கரின் திருவுருவச் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT