கோவை மாநகரில் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரித்தும், தமிழக உளவுத் துறையும், கோவை மாநகரக் காவல்துறையும் அதை உரிய முறையில் கண்காணிக்கத் தவறியது ஏன் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பினாா்.
இது குறித்து அவா் ட்விட்டா் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: கோவையில் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கோவை மாநகரக் காவல்துறைக்கு, மத்திய அரசின் உளவுத் துறை அக்.18-ஆம் தேதி எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதற்கிடையே, அக்.23-ஆம் நடந்த சம்பவத்தில், 2019-ஆம் ஆண்டில் தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்ட ஜமேஷா முபின் இறந்துள்ளாா். 5 நாள்களுக்கு முன்பே மத்திய உளவுத்துறை எச்சரித்திருந்த நிலையில், தமிழக அரசின் உளவுத் துறையும், கோவை மாநகரக் காவல்துறையும் அதை முறையாக கண்காணித்து தடுக்கத் தவறியது ஏன்?
திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் அழுத்தம் காரணமாக, சில நபா்களை கண்காணிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிப்பாரா? என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.