சென்னையில் பரவலாக மழை: 2 மணிநேரத்திற்கு தொடரும்..
சென்னையில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 2 மணிநேரத்திற்கு தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 2 மணிநேரத்திற்கு தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.
திடீர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், பணிகளுக்கு செல்வோரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதையும் படிக்க | தெலங்கானாவில் ராகுல் காந்தி! 50-வது நாள் நடைபயணம்
இந்நிலையில், எழும்பூர், மாம்பலம், பெரம்பூர், புரசைவாக்கம், ஸ்ரீபெரும்புதூர், அயனாவரம், தாம்பரம், திருப்போரூர், வண்டலூர், மாதாவரம், பொன்னேறி, அம்பத்தூர், பல்லாவரம், ஆலந்தூர், குன்றத்தூர், பூந்தமல்லி, மதுரவாயல், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு(காலை 11.30 வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.