ரூ.1,000 உதவித் தொகை: முதலாமாண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்  
தமிழ்நாடு

ரூ.1,000 உதவித் தொகை: நவ. 1 முதல் முதலாமாண்டு மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

புதுமைப் பெண் திட்டத்தில் உதவித் தொகை பெற முதலாமாண்டு கல்லூரி மாணவிகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

DIN


சென்னை: புதுமைப் பெண் திட்டத்தில் உதவித் தொகை பெற முதலாமாண்டு கல்லூரி மாணவிகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் 6-12ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை செப்டம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ், இதுவரை 2,3,4ஆம் ஆண்டு பயிலும் சுமார் 1.10 லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில், முதலாமாண்டு பயிலும் மாணவிகளும் உதவித் தொகை பெற இந்த திட்டத்துக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுமைப் பெண் திட்டத்தில் உதவித் தொகை பெற விரும்பும் மாணவிகள், கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவ.1 முதல் 11-ஆம் தேதி வரை www.puthumaipenn.tn.gov.in விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது, உயா்கல்வி பயிலும் (முதலாமாண்டு) மாணவிகள் இணையதளத்தில் மாதம் ரூ.1,000 உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதில், கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பா் 1-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது. அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இந்தத் திட்டத்துக்கு தகுதியானவா்கள். இதற்காக, நவம்பா் 11-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். 

மாணவிகள் தவறாமல் ஆதாா் அட்டை, மாற்றுச் சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை நிறைவு செய்யும் முறையில் சந்தேகம் இருப்பின், சமூக நல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வலியோடு முறியும் மின்னல்... கீர்த்தி ஷெட்டி!

கூலி படத்தில் கொலை செய்யப்படுவேனா? ஷ்ருதி ஹாசன் விளக்கம்!

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT