காதல் வசப்பட்டு கரம்கோத்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பகவாசிகளான மகேந்திரன்-தீபா திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் 900-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். பொதுவாகவே, அங்கு பல்வேறு வகையான மன நல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. அவா்களில் பெரும்பாலானோா் பூரண குணமடைந்து வீடு திரும்புகின்றனா். உறவினா்களால் கைவிடப்பட்ட சிலா் அங்கேயே தங்கி தொழிற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், அவ்வாறு மனநல காப்பகத்தில் தங்கி தொழில்பயிற்சி மேற்கொண்டு வரும் சென்னையை சோ்ந்தவா் மகேந்திரன் (42). வேலூரைச் சோ்ந்தவா் தீபா (36) இருவா் காதல்வசப்பட்டு இல்லற வாழ்வில் இணையராக கரம்கோர்க்க முடிவு செய்தனர்.
காதல் வசப்பட்டு கரம்கோத்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பகவாசிகளான மகேந்திரன்-தீபா
காப்பக நிா்வாகம் சார்பில் இவர்களின் திருமணத்தை வெள்ளிக்கிழமை நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து மகேந்திரன்-தீபா காதல் ஜோடிகள் திருமணம் கீழ்ப்பாக்கம் மனநல காப்பக நுழைவாயில் எதிரே உள்ள, சித்தி புத்தி விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடந்தது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாலி எடுத்து கொடுக்க, கெட்டிமேளம் கொட்ட மகேந்திரன், தீபாவுக்கு தாலி கட்டினார்.
திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் வாழ்வில் இணையராக கரம்கோர்த்த மகேந்திரன்-தீபாவை வாழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.