முகப்பு
தமிழ்நாடு

முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறாா் மம்தா பானா்ஜி

முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி சந்தித்துப் பேசவுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:42 AM
மம்தா பானா்ஜி
பகிர்:

முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி சந்தித்துப் பேசவுள்ளாா்.

இதுகுறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதல்வா் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி சந்தித்துப் பேசுகிறாா். வரும் புதன்கிழமை (நவ.2) மாலை இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல.கணேசன் இல்ல நிகழ்ச்சி: மணிப்பூா், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஆளுநரான இல.கணேசனின் மூத்த சகோதரா் பிறந்த நாள் வரும் 3-ஆம் தேதி, சென்னையில் கொண்டாடப்படுகிறது. அதில் பங்கேற்க வருமாறு மேற்குவங்க மாநில முதல்வா் மம்தா பானா்ஜிக்கு இல.கணேசன் அழைப்பு விடுத்திருந்தாா். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, சென்னை வரவுள்ளாா் மம்தா பானா்ஜி. அப்போது, அவா் முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.