முகப்பு
தமிழ்நாடு

சிறைத் துறை டிஜிபியாக அம்ரேஷ்: 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:42 AM
பகிர்:


தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சிறைத் துறை டிஜிபியாக அம்ரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டுள்ளார். சிபிசிஐடி ஏடிஜிபியாக  அபய்குமார் சிங் மாற்றப்பட்டுள்ளார்.

சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக சஞ்சய் குமார், ஆயுதப்படை ஐஜியாக ராதிகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஏடிஜிபி வெங்கடராமன் காவல் துறை நவீனமயமாக்கல் பிரிவை கூடுதலாக கவனிப்பார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →