தமிழ்நாடு

தமிழ்வழியில் மருத்துவப் படிப்பு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

DIN

தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கிவைத்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் முழுஉடல் பரிசோதனை மையத்திற்கான இணையதளத்தையம் தொடங்கிவைத்தார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழில் மருத்துவப் படிப்புக்கான முதலாம் ஆண்டு பாடத் திட்டம் மொழிபெயர்ப்புப் பணிகள் கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. அதன்படி, 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்' என்று கூறியுள்ளார். 

ஏற்கெனவே தமிழகத்தில் பொறியியல் படிப்புகள் தமிழ் வழியில் கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐந்தரை அடியில் 2001 வெள்ளி நாணயங்கள் பதிக்கப்பட்ட விநாயகர் சிலை!

விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார்! டிடிவி தினகரன்

சிலிண்டர் வெடித்ததால் தீ பற்றியது! மரண வாக்குமூலத்தில் நிக்கி பொய் சொன்னது ஏன்?

அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா அதிக வரிகளை விதிக்க வேண்டும்: கேஜரிவால்

அரசியல் கடந்து முதல்வருக்கு மதிப்பளிக்க வேண்டும்! நடிகர் சூரி

SCROLL FOR NEXT