கோப்புப் படம் 
தமிழ்நாடு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.1) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

DIN

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.1) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச்சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று தொடர் மழை பெய்தது.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,  காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். 

வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் இதனைத் தெரிவித்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலத்திலிருந்து.. டிச.4ல் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்ய திட்டம்!!

ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஆஜர்!

தமிழ் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது! முதல்வர் வழங்கினார்!

2025 முடிய 6 வாரங்களே! அதற்குள் எடைகுறைய 5 வழிகள்!!

புதுச்சேரி பனித்திட்டு பகுதி கடலில் முதல் முறையாக பயிரிடப்பட்ட கடற்பாசி அறுவடை!

SCROLL FOR NEXT