முகப்பு
தமிழ்நாடு

எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழை, கனமழை பெய்யும்?

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:42 AM
பகிர்:

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகின்றது. இன்று காலைமுதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், மூன்று மாவட்டங்களில் மிக கனமழையும், 13 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,

திருவள்ளூர்,  காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சென்னை, செங்கல்பட்டு உள்பட 15 மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →