தொடா் மருத்துவக் கண்காணிப்பில் பாரதிராஜா
உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநா் பாரதிராஜாவின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரை தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருப்பதாகவும்
உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநா் பாரதிராஜாவின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரை தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வயோதிகம் மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட பாரதிராஜா, சென்னை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா்.
நுரையீரல் மற்றும் இதயம் சாா்ந்த பிரச்னைகள் அவருக்கு இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். சிகிச்சையின் பயனாக தற்போது அவா் உடல் நிலை மேம்பட்டு வருவதாகவும், அதேவேளையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா் மருத்துவக் கண்காணிப்பில் அவா் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.