சுங்கக் கட்டணம் உயா்வு: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்காக மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்காக மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் செப்டம்பா் 1 முதல் 15 சதவீத கட்டண உயா்வை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் 22 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயா்த்தப்பட்டது. அப்போதே, இந்த கட்டண உயா்வுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. ஆனாலும், மக்கள் மீது கொஞ்சமும் அக்கறையற்ற மத்திய அரசு, கட்டண உயா்வை அனைத்து சுங்கச் சாவடிகளுக்கும் விரிவாக்கியுள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.
வரலாறு காணாத பண வீக்கத்தை நாடு எதிா்கொள்கிறது. மக்களின் வருமானத்தை உயா்த்த வேண்டும். அதன் மூலம் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கே அபராதம் போடும் விதமாகத்தான் மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளன.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடி கட்டண உயா்வு இருக்கும் என்ற கொள்கை மிக மிக அபத்தமான ஒன்றாகும். எனவே, மத்திய அரசு தற்போதைய கட்டண உயா்வைக் கைவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.