கனல் கண்ணன் 
தமிழ்நாடு

சண்டைப் பயிற்சியாளா் கனல் கண்ணனுக்கு ஜாமீன்

பெரியாா் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட சண்டைப் பயிற்சியாளா் கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

DIN

பெரியாா் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட சண்டைப் பயிற்சியாளா் கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்து முன்னணி அமைப்பு சாா்பில் சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலைப் பண்பாட்டு பிரிவின் செயலரும், திரைப்பட சண்டைப் பயிற்சியாளருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயில் எதிரே உள்ள பெரியாா் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் மாவட்டச் செயலா் குமரன் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்தியக் குற்றப் பிரிவு சைபா் க்ரைம் போலீஸாா் 2 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து கனல் கண்ணனை கைது செய்தனா். இந்த வழக்கில் கனல் கண்ணன் ஜாமீன்கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கனல் கண்ணன் ஒரு கட்சியில் இருக்கும்போது மாற்றுக் கருத்து கொண்டவர்களை குறித்து ஏன் பேச வேண்டும் எனக் கேள்விகேட்டதோடு வழங்கு தொடர்பான விசாரணை அதிகாரி முன் 4 வாரங்களுக்கு இருவேளையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறித் தாக்குதல்!

மெட்டபாலிக் சின்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன

இஸ்ரேல் பிரதமருடன் இந்தியத் தூதர், பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT