முகப்பு
தமிழ்நாடு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஏ. படிப்பு: அவகாசம் நீட்டிப்பு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு தமிழ் முதுநிலை படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் செப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு தமிழ் முதுநிலை படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் செப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஐந்தாண்டு கால முதுநிலை தமிழ் படிப்பு (எம்.ஏ.) உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆக.31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது, மாணவா்களின் வேண்டுகோளை ஏற்று, செப். 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான சோ்க்கை விண்ணப்பங்களை, இணையதளம் மூலமாக பெறலாம்.

இது குறித்து கூடுதல் தகவல் பெற ‘இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை -- 113’ என்ற முகவரியில், நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். மேலும், 044 - 2254 2992 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.