முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் டி.ஆர்.பாலு
கலைஞர் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ஆர்.பாலு, சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கலைஞர் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ஆர்.பாலு, சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பெரியார், அண்ணா பிறந்த நாள், திமுகவின் தொடக்க நாள், இந்த மூன்று நாள்களையும் இணைத்து ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு திமுகவின் முப்பெரும் விழா வரும் 15ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. முப்பெரும் விழாவில் விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர்களை திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க- திமுக முப்பெரும் விழா: டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருது
அதில் கலைஞர் விருது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கலைஞர் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ஆர்.பாலு, சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்வின்போது, கட்சித் துணைப் பொதுச் செயலாளரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான க. பொன்முடி, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.