கோப்புப் படம். 
தமிழ்நாடு

பத்திரப்பதிவுத்துறை மென்பொருள் சீராக இயங்க நடவடிக்கை

ஆன்லைனில் பத்திரப்பதிவு மேற்கொள்ள ஏதுவாக அதன் ஸ்டார் மென்பொருள் சீராக இயங்க நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளளார். 

DIN

ஆன்லைனில் பத்திரப்பதிவு மேற்கொள்ள ஏதுவாக அதன் ஸ்டார் மென்பொருள் சீராக இயங்க நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளளார்.
இதுகுறித்து பதிவுத்துறை தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பதிவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக துறையில் பல சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பதிவுத்துறையால் பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்டார் மென்பொருளில் கீழ்கண்ட புதிய அலகுகள் உருவாக்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆவணதாரர்களை ஆதார் வழி அடையாளம் கண்டு ஆள்மாறாட்டத்தை முற்றிலும் தவிர்த்தல்.
வில்லங்கச்சான்றில் திருத்தம் மேற்கொள்ள இணையவழி விண்ணப்பித்தல்.
கிறித்தவ திருமண வடிப்புகளை சம்பந்தப்பட்ட துணை பதிவுத்துறைத் தலைவர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையவழி விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுதல்.
ஒருங்கிணைந்த தணிக்கை அலகு முதியவர்களுக்கு ஆவணப்பதிவில் முன்னுரிமை.
ஆவணங்களைப் பதிவு செய்வதற்காக பொதுமக்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொண்டு சார்பதிவாளர் அலுவலகம் வந்த பின்னர் முன்பதிவு செய்த அதே வரிசையில் வரிசைக்கிரமமாக எந்தவிதமான பாகுபாடுமின்றி ஆவணங்கள் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக பொதுமக்கள் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்தே பதிவுக்கு ஆவணங்களைத் தாக்கல் செய்கின்றனர்.
மங்களகரமான நாட்களில் ஆவணப்பதிவு மேற்கொள்ள விரும்பி ஒரே சமயத்தில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வருவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு ஒரே சமயத்தில் அனைத்து அலுவலகங்களிலும் ஆவணப்பதிவு மேற்கொள்ளப்படும்போது நெட்வொர்க்கில் அதிக நெரிசல் ஏற்பட்டு மென்பொருளின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது.

பொதுமக்களின் வசதிக்காக சொத்து குறித்த வில்லங்க விவரங்களை பதிவுத்துறையின் வலைதளத்திலிருந்து இணையவழியாக இலவசமாக பார்வையிட ஏற்படுத்தியிருந்த வசதியினை பயன்படுத்தி சில கைபேசி செயலிகள் வில்லங்கச் சான்றுகளை தரவிறக்கம் செய்து வருவது சமீபத்தில் கண்டறியப்பட்டு இதனால் ஏற்பட்ட நெட்வொர்க் பிரச்னையை நிவர்த்தி செய்து மென்பொருளை மேம்படுத்தும் பணிகள் இரவு பகலாக நடைபெற்றது.
தன்னிச்சையாக பதிவுத்துறை வலைதளத்தில் டேக் செய்யப்பட்டிருந்த அந்த கைபேசி செயலிகளின் இணைப்பு தற்போது துண்டிக்கப்பட்டு, நெட்வொர்க் பிரச்சனை சீராக்கப்பட்டுள்ளது.
பதிவுத்துறையின் யு.ஆர்.எல் எனப்படும் இணைய முகவரியினை குறியாக்கம் செய்தல், இரண்டு நொடிகளுக்கு மேல் காலமெடுக்கும் மித வேக தரவு தள வினவுகளை மாற்றியமைத்தல், தரவு தளத்தை சுத்தப்படுத்துதல் ஆகிய மேம்பாட்டு பணிகள் மூலம் மென்பொருள் சீர் செய்யப்பட்டு 02-09-2022 முதல் பொதுமக்கள் எந்தவிதமான இன்னலுமின்றி ஆவணப்பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மென்பொருள் துரிதமாக செயல்படுவது தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு ஆவணப்பதிவு தங்கு தடையின்றி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண் கவர் பொருங்கோட... மேகா!

டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் பாடிய ‘சிங்காரி’ பாடல் வெளியீடு!

பல பொருள் - ஒரு சொல் பயில்க

குரலினிது... ஷ்ரேயா கோஷால்!

ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த ஜடேஜா; எட்டிப் பிடிக்கும் தூரத்தில் சச்சினின் சாதனை!

SCROLL FOR NEXT