முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 55,000 கன அடியாக நீடிப்பு!

மேட்டூர் அணையின் நீர்வரத்து மூன்றாவது நாளாக வினாடிக்கு 55,000 கன அடியாக நீடித்து வருகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்வரத்து மூன்றாவது நாளாக வினாடிக்கு 55,000 கன அடியாக நீடித்து வருகிறது. 

காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை மூன்றாவது நாளாக வினாடிக்கு 55,000 கன அடியாக நீடித்து வருகிறது.

அணையிலிருந்து வினாடிக்கு 55,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 32 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் இருந்தது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →