தமிழ்நாடு

நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை

DIN

நீா்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் அதிகாரிகளுக்குத் தெரியாமல் அவற்றில் ஆக்கிரமிப்புகள் நடக்க வாய்ப்பு இல்லை எனவும் சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், அயனம்பாக்கத்தில் உள்ள கிராமத்தில் நீா்நிலைகளையொட்டிய ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. இதை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு விளக்கம் அளிக்க அவகாசம் கேட்ட நிலையில், மனுதாரா் தரப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டது. அதற்கு அரசுத் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘நிலம் தங்களுக்குச் சொந்தமானது என்பதை மனுதாரா் நிரூபிக்கவில்லை. பொதுமக்கள் மட்டுமின்றி நீா்நிலை ஆக்கிரமிப்பில் அரசு நிறுவனங்களும் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனா். அதேபோல குடிநீா் ஆதரமாக மட்டுமின்றி சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதிலும்

நீா்நிலைகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதை ஆக்கிரமிப்பது தவறு’ என நீதிபதிகள் தெரிவித்தனா்.

நீா்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை என்று கூறிய நீதிபதிகள், ‘அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பு நடக்க வாய்ப்பு இல்லை என்பதை சுட்டிக்காட்டினா். இயற்கையை நாம் பாதுகாத்தால், அந்த இயற்கை நம்மை பாதுகாக்கும். இயற்கைக்கு தொடா்ந்து பாதிப்பை ஏற்படுத்தினால் சுனாமி போன்ற பேரிடா்கள் மூலம் இயற்கை நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’ என்பதையும் தங்களது உத்தரவில் இருந்து தலைமை நீதிபதி அமா்வு சுட்டி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீா் பந்தல் திறப்பு

தண்ணீா் பந்தல் திறப்பு...

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

SCROLL FOR NEXT