கொலை செய்யப்பட்ட பாஸ்கரன் 
தமிழ்நாடு

தொழிலதிபரைக் கொன்று பாலிதீன் கவரில் கட்டி வீசிய கும்பல்: ஒருவா் கைது

சென்னையை அடுத்துள்ள ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபரைக் கொன்று பாலிதீன் கவரில் கட்டி கால்வாயில் வீசிச் சென்ற கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

DIN


சென்னை: சென்னையை அடுத்துள்ள ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபரைக் கொன்று பாலிதீன் கவரில் கட்டி கால்வாயில் வீசிச் சென்ற கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திரைப்பட தயாரிப்பாளரான ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணபுரம் 3 ஆவது தெருவை சோ்ந்தவா் பாஸ்கரன் (67). கடந்த வெள்ளிக்கிழமை சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டுச் சென்றாா். ஆனால் அதன் பின்னா், அவா் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், சனிக்கிழமை விருகம்பாக்கம் சின்மயா நகா் நெற்குன்றம் சாலைக்கு அருகே உள்ள காளியம்மன் தெரு பகுதியில் பெரிய கழிவு நீர் கால்வாய் அருகே பெரிய கருப்பு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில், பாஸ்கரன் சடலம் கிடந்தது. அவரது காரும் அதேப் பகுதியில் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது.

இது குறித்து விருகம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் பாஸ்கரனின் நண்பா் விருகம்பாக்கம் அரங்கநாதன் நகா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெ.கணேசன் (54) என்பவரை ஞாயிற்றுக்கிழமை செங்குன்றம் அருகே வைத்து போலீசார் கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடையவர்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி: விஜய்வசந்த் எம்.பி. வழங்கினாா்!

திமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் கிடையாது: வைகோ

பிரதமா் மோடி பாசாங்கு: காங்கிரஸ் விமா்சனம்

விஜய் கட்சி நடத்தி என்ன பயன்?எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

நொய்யல் ஆற்றை முழுவதுமாக சுத்திகரிக்க விரிவான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT