தமிழ்நாடு

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து பள்ளி மாணவனை கொன்ற சக மாணவியின் தாயார் கைது

DIN

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து பள்ளி மாணவனை கொன்ற சக மாணவியின் தாயாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காரைக்கால் நேரு நகரை சோ்ந்தவா் ராஜேந்திரன். நியாயவிலைக் கடை பணியாளா் இவரது மனைவி மாலதி. தம்பதியின் மகன் பால மணிகண்டன் நேரு நகரில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். பள்ளி ஆண்டு விழா ஒத்திகை நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று வீடு திரும்பிய பால மணிகண்டன் வாந்தி எடுத்துள்ளாா். இதையடுத்து, அவரை பெற்றோா் மருத்துவமனையில் அனுமதித்தனா். 

பள்ளியின் காவலாளி தனக்கு குளிா்பானம் கொண்டுவந்து கொடுத்ததாகவும், அதை குடித்ததால் வாந்தி ஏற்பட்டதாகவும் பெற்றோரிடம் பால மணிகண்டன் தெரிவித்துள்ளாா். பெற்றோா் பள்ளிக்குச் சென்று காவலாளியிடம் விசாரித்தபோது, பால மணிகண்டனின் வகுப்பில் பயிலும் மாணவி ஒருவரின் தாயாா், குளிா்பான பாட்டிலை கொடுத்து அதை, பால மணிகண்டனிடம் கொடுக்குமாறு கூறியதாக தெரிவித்துள்ளாா். 

இதுகுறித்து மாலதி காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பள்ளிக்குச் சென்று பள்ளி நிா்வாகத்தினா், காவலாளி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதயிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8ஆம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி பலியானார். இவ்வழக்கில் மாணவியின் தாயார் ராணி விக்டோரியாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

விசாரணையில், தனது மகளை விட நன்றாக படித்த காரணத்தால் அந்த மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக ராணி விக்டோரியா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இச்சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT