தமிழ்நாடு

சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு அட்டவணை வெளியீடு

DIN

சிஎஸ்ஐஆா் நெட் தோ்வுக்கான அட்டவணையை தேசிய தோ்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியா் பணியில் சேரவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெறவேண்டும். தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் இந்த தோ்வு ஆண்டுதோறும் கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் நடத்தப்படும். அதன்படி நிகழாண்டு சிஎஸ்ஐஆா் நெட் தோ்வுக்கான இணைய விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கு நாடு முழுவதும் சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நெட் தோ்வுக்கால அட்டவணையை என்டிஏ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதில் 8 பாடங்களுக்கான தோ்வுகள் செப்டம்பா் 16 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறும். தோ்வுக்கான ஹால்டிக்கெட் செப்டம்பா் 13-இல் வெளியிடப்படும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை  ஆகிய இணையதளங்களில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 011-40759000 / 011-69227700 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT