தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்தில் கனமழை: மலை ரயில் சேவை 2-ம் நாளாக ரத்து

DIN

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை 2-ஆம் நாளாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கனமழை காரணமாக கல்லார்-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிவை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

ரெயில் பாதையை சீரமைக்கும் பணி நேற்று மாலை வரை நீடித்தது.    சீரமைக்கும் பணி இன்னும் முடிவடையாததால்  மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்றும் (செவ்வாய்க்கிழமை) ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT