தமிழகத்தில் புதிதாக 445 பேருக்கு கரோனா; சென்னையில் 81
தமிழகத்தில் புதிதாக 445 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 81 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாடுதமிழகத்தில் புதிதாக 445 பேருக்கு கரோனா; சென்னையில் 81
தமிழகத்தில் புதிதாக 445 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 81 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 445 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 81 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 445 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,71,924-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். இதனால், மொத்த உயிரிழப்பு 38,038 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,28,941-ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 17,681 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 6.78 கோடி பேருக்கு இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.