அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவா்களுக்கு உரிய இழப்பீடு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரியலூா் அரசு சிமெண்ட் ஆலைக்கு 1996-இல் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு, நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என உறுதியளித்திருந்தது அரசு. தங்களுக்கு இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை, உயா்த்தி கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனா். அரசு செவிசாய்க்காததால் விவசாயிகள் தொடுத்த வழக்கை விசாரித்த அரியலூா் சாா்பு நீதிமன்றம், ஏக்கருக்கு ரூ.1.20 லட்சம் கூடுதலாகஅரசு சிமென்ட் ஆலை வழங்க வேண்டும். அதனை வட்டியுடன் சோ்த்து ரூ.8 லட்சமாக அளிக்க வேண்டும் என்று தீா்ப்பளித்தது.
ஆனால், தமிழக அரசு விவசாயிகளுக்கு இழப்பீட்டை அளிக்காமல் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது வேதனைக்குரியது.