கோப்புப்படம் 
தமிழ்நாடு

பச்சோந்தியை விட அதிக நிறம் மாறுவார் ஓபிஎஸ்: இபிஎஸ்

பச்சோந்தியை விட அதிக நிறம் மாறுவார் ஓபிஎஸ் என எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: பச்சோந்தியை விட அதிக நிறம் மாறுவார் ஓபிஎஸ் என எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகம் சென்ற இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

அதிமுகவில் பிளவு கிடையாது. கட்சிக்கு எதிராக செயல்பட்டதால்தான் சிலர் நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும்.

கீழ்த்தரமான எண்ணத்தில் இருக்கும்போது, திமுகவுக்கும் உடந்தையாக இருக்கும்போது ஒபிஎஸ்ஸை எப்படி தொண்டர்கள் மன்னிப்பார்கள். புனிதமான தலைமை அலுவலகத்தை சேதப்படுத்திய கீழ்த்தரமான வேலையில் ஓபிஎஸ் ஈடுபட்டார்.
 
பச்சோந்தியை விட அதிக நிறம் மாறுவர் ஓபிஎஸ். ஜெயலலிதாவுக்கோ, அதிமுகவுக்கோ அவர் விசுவாசமாக இருந்ததில்லை. ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டாலும் தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

96 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுடன் உள்ளனர். இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. அதிமுகவுக்கு விஸ்வாசம் இல்லாதவர் ஓபிஎஸ். 1989-ல் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் பணியாற்றிவர் ஓபிஎஸ்.


போதைப்பொருளை விற்பதே திமுகவினர் என்பதால்தான் அதை கட்டுப்படுத்த தமிழக அரசால் முடியவில்லை என  எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT