தமிழ்நாடு

ஓலா ஓட்டுநர் அட்ராசிட்டி: கூடுதல் கட்டணம் கேட்டு மிரட்டல்

கோவை கணபதி பகுதியை சேர்ந்த 26 வயது பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் 5ஆம் தேதி இரவு  ஒப்பணக்காரர் வீதியில் உள்ள கடைகளில் பர்செசிங் செய்து விட்டு ஓலா செயலில் ஆட்டோ ஒன்றை புக் செய்துள்ளனர்.

DIN

கோவை: கோவை கணபதி பகுதியை சேர்ந்த 26 வயது பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் 5ஆம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் ஒப்பணக்காரர் வீதியில் ஷாப்பிங் செய்து விட்டு ஓலா செயலில் ஆட்டோ ஒன்றை புக் செய்துள்ளனர்.

ஓலாவில் இருந்து சந்தோஷ்(30) என்ற ஆட்டோ ஓட்டுநர் இவர்களுக்காக வந்துள்ளார். ஆனால் அவர் புக்கிங் செய்த பணத்தை விட 100 ரூபாய் அதிகமாக தர வேண்டுமென கூறியுள்ளார். இதனால் புக்கிங் செய்த அப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு புக்கிங் கை ரத்து செய்து விட்டு வேறொரு ஆட்டோ ஏறி சென்றுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் புக்கிங் செய்த போது வந்த அப்பெண்ணின் செல்போனை தொடர்ந்து கொண்டு அப்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியாதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் பெரியகடை வீதி காவலர் வழக்கு பதிவு அந்த ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் விசிக தொடரக் காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்

பெரியகுளம் பகுதியில் நாளை மின் தடை

அரசு ஐடிஐ-களில் பெண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

SCROLL FOR NEXT