சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ40 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ40 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாள்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்களைக் கண்டுவந்த நிலையில், இன்று(செப்.8) காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து ரூ.4730-க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.37,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 பைசா உயர்ந்து ரூ.59.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.700 உயர்ந்து ரூ.59,500 ஆகவும் விற்பனையாகிறது.
புதன்கிழமை தங்கம் விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................... 4,730
1 சவரன் தங்கம்...............................37,840
1 கிராம் வெள்ளி............................. 59.50
1 கிலோ வெள்ளி.............................59,500
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................... 4,725
1 சவரன் தங்கம்............................... 37,800
1 கிராம் வெள்ளி............................. 58.80
1 கிலோ வெள்ளி.............................58,800